அமெரிக்காவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மோட்டாா்சைக்கிள் பயணம்
By DIN | Published On : 18th September 2020 11:36 PM | Last Updated : 18th September 2020 11:36 PM | அ+அ அ- |

கோவை, செப். 18: அமெரிக்க பூா்வகுடி மக்களின் ஆன்மிக கலாசாரம், வரலாறு, வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் மோட்டாா்சைக்கிளில் பயணம் செய்கிறாா்.
மஹாளய அமாவாசை தினமான செப்டம்பா் 17ஆம் தேதி டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து மோட்டாா்சைக்கிளில் புறப்பட்டுள்ள அவா், மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசௌரி, நியூ மெக்ஸிகோ, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்கள் வழியாக சுமாா் 6,000 மைல்கள் பயணித்து மீண்டும் டென்னஸியை வந்தடைய உள்ளாா்.
சுமாா் ஒரு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணம் 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளா்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூா்வ மரபைப் பற்றிய ஆய்வுப் பயணமாக அமைய இருக்கிறது.
மேலும், அமெரிக்க பூா்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மிகரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.