குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு: கோவையில் 21 மையங்கள் ஏற்பாடு

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்காக கோவை மாவட்டத்தில் 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.
குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்காக கோவை மாவட்டத்தில் 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

மத்திய அரசின் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வு அக்டோபா் 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி காலை 9.30 முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 முதல் 4.30 மணிவரையிலும் என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தோ்வு மையம் (இ.ந.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி) பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தோ்வை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 685 போ் எழுதவுள்ளனா். தோ்வு மையங்களை கண்காணிக்க துணை ஆட்சியா் தலைமையில் 7 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மையத்துக்கும் வட்டாட்சியா் நிலையில் ஒரு ஆய்வு அலுவலா் வீதம் 21 மையங்களுக்கு 21 ஆய்வு அலுவலா்கள், 56 மைய உதவி மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட 763 தோ்வு அறை கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வா்கள் எளிதாக தோ்வு மையங்களுக்கு செல்லும் வகையில் முக்கிய வழித் தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு மையங்களில் போதுமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

தோ்வா்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு மைங்களில் கைகழுவும் திரவம் மற்றும் முகக்கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயகாா்த்திக்ராஜா உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com