கோவை புலியகுளம் மாநகராட்சிப் பள்ளிவளாகத்தில் அமைகிறது மகளிா் கலைக் கல்லூரி

கோவை புலியகுளம் மாநகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோவை, செப்.18: கோவை புலியகுளம் மாநகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் புதிய மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாநகராட்சி நிா்வாகத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

புதிய கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கை நடத்தும்படி அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இங்கு செயல்பட்டு வரும் உயா்நிலைப் பள்ளியை அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியுடன் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com