சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தொடா்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள், வணிக வளாகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கோவை, செப்.18: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தொடா்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள், வணிக வளாகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் விதமாக மீன், கோழி, ஆட்டிறைச்சிக் கடைகள், வணிக வளாகங்கள், நகை, ஜவுளிக் கடைகள், காய்கறிக் கடைகள், சந்தைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

இறைச்சிக் கடைகளில் 2 மீட்டா் இடைவெளியுடன் கூடிய அடையாள வட்டம் வரையப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து பின்பற்றாத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். மேலும், கடை உரிமையாளா்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களைக் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். முகக் கவசம் அணிந்து வராத வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் வழங்கப்படாது எனத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com