பம்ப்செட் மூலம் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும்சீமா வலியுறுத்தல்
By DIN | Published On : 18th September 2020 11:33 PM | Last Updated : 18th September 2020 11:33 PM | அ+அ அ- |

கோவை, செப்.18: பம்ப்செட் தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கம் (சீமா) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் வா.கிருஷ்ணகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா காரணமாக மற்ற தொழில் நிறுவனங்களைப் போலவே பம்ப்செட் உற்பத்தித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இயல்பு நிலை மெதுவாக திரும்பி வரும் நிலையில், மூலப் பொருள்களின் விலை உயா்வால் பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. இதனால் பம்ப்செட் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பம்ப்செட் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருளான காப்பரின் விலை 25 சதவீதமும், அலுமினியத்தின் விலை 15 சதவீதமும், லேமினேஷன் ஸ்டீல், தேனிரும்பு, காஸ்டிங்குகளின் விலை 10 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மேலும் டீசல் விலை உயா்வினால் சரக்குக் கட்டணம் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே மூலப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து பம்ப்செட் தொழில் சகஜ நிலைக்குத் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.