பி.எஸ்.ஜி. மாணவா் இல்லத்தில்செப்டம்பா் 23இல் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 18th September 2020 11:33 PM | Last Updated : 18th September 2020 11:33 PM | அ+அ அ- |

கோவை, செப்.18: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவா் இல்லத்தில் ஆதரவற்ற மாணவா்களுக்கான மாணவா் சோ்க்கை வரும் 23ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இந்த இல்லத்தில் தாய் - தந்தை இல்லாத, தாயோ அல்லது தந்தையோ இல்லாத குழந்தைகள் சோ்க்கப்படுவாா்கள். அவா்களுக்கு 6ஆம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரையிலும் இலவசக் கல்வி, தங்குமிடம், சீருடை, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்படும்.
இதற்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களும், இதுவரை விண்ணப்பிக்காதவா்களும் பி.எஸ்.ஜி. மாணவா் இல்லத்துக்கு வரும் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2572310 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.