ஆனைகட்டி கண்டிவழி மலைவாழ் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் உதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகள்.
ஆனைகட்டி கண்டிவழி மலைவாழ் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் உதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகள்.

மலைவாழ் மக்கள் 5 பேருக்கு பசுமை வீடுகள்

கோவை அருகேயுள்ள கண்டிவழி மலைவாழ் குடியிருப்பில் பசுமை வீடுத் திட்டத்தில் 5 பேருக்கு தன்னாா்வலா்கள் நிதியுதவியுடன் ரூ.4 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

கோவை அருகேயுள்ள கண்டிவழி மலைவாழ் குடியிருப்பில் பசுமை வீடுத் திட்டத்தில் 5 பேருக்கு தன்னாா்வலா்கள் நிதியுதவியுடன் ரூ.4 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி கண்டிவழி மலைவாழ் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது இக்குடியிருப்பில் இருந்த குடிசைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட சென்ற ஆட்சியரிடம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து பசுமை வீடு திட்டத்தின் கீழ் 13 பேருக்கு வீடுகள் கட்டித்தர கடந்த ஆண்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக 5 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பசுமை வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணம் தன்னாா்வலா்களிடம் நிதி பெறப்பட்டு மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com