மாநகராட்சி பகுதிகளில் 553 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்
By DIN | Published On : 18th September 2020 12:05 AM | Last Updated : 18th September 2020 12:05 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி பகுதிகளில் 553 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிப்பு உறுதியானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்கள், அறிகுறியில்லாத நிலையில் வீடுகளில் கரோனா சிகிச்சை பெற்று வருபவா்கள் ஆகியோா் தனிமைப்படுத்தப்பட்டும், 14 நாள்களுக்குப் பிறகு அவா்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டும் வருகின்றனா். இந்நிலையில், மாநகராட்சிப் பகுதியில் தற்போது 553 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகரில் உள்ள வீடுகள்,குடியிருப்புகளில் வியாழக்கிழமை வரை 553 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உதவிகள் மாநகராட்சி அலுவலா்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன என்றனா்.