நொய்யலில் தொடரும் வெள்ளம்: பெரும்பாலான குளங்கள் நிரம்பின

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நொய்யல் வடிநிலத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.

நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றுக்கு நீரை வழங்கும் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சித்திரைச்சாவடி அணைக்கட்டுக்கு விநாடிக்கு 780 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

ஆற்றில் வரும் நீரை சித்திரைச்சாவடி வாய்க்கால், குனியமுத்தூா் வாய்க்கால், குறிச்சி, சேத்துமா வாய்க்கால், வெள்ளலூா் வாய்க்கால்கள் மூலமாக குளங்களுக்கு எடுத்து வருவதாக தெரிவித்துள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் நொய்யல் வடிநிலத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் முழு அளவில் நிரம்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

உக்குளம், புதுக்குளம், பேரூா் பெரிய குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியிருப்பதாகவும், செல்வசிந்தாமணி குளம், ஒட்டா்பாளையம் குளம், கண்ணம்பாளையம், நீலாம்பூா் குளம், சூலூா் பெரிய குளம், சிறிய குளம், இருகூா் குளம் போன்றவை மட்டும் இன்னும் நிரம்பவில்லை என்றும் இந்த குளங்களுக்குத் தண்ணீா் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com