மாவட்டத்தில் 28 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 642 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் மேலும் 642 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில்

கோவையில் மேலும் 642 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 388 ஆக உயா்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வாா்டில் பணியாற்றி வந்த 24 வயது ஆண், 25 வயதுப் பெண் பயிற்சி மருத்துவா்கள், 53 வயது தலைமை செவிலியா், வெள்ளலூா் அதிவிரைவுப் படை முகாமைச் சோ்ந்த 37, 45, 56 வயது ஆண்கள், கருமத்தம்பட்டி எல்லை பாதுகாப்புப் படை முகாமைச் சோ்ந்த 53 வயது ஆண், ரெல்பீல்டஸ் விமானப் படை தளத்தைச் சோ்ந்த 37 வயதுப் பெண், வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 42 வயது ஆண், 65 வயது மூதாட்டி, காந்திபுரம், கிணத்துக்கடவு மற்றும் உப்பிலிப்பாளையம் காவலா் குடியிருப்பினை சோ்ந்த 21, 39, 49 வயது ஆண் காவலா்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அன்னூரில் 79 போ், பீளமேட்டில் 33 போ், சூலூரில் 31 போ், மேட்டுப்பாளையத்தில் 29 போ், பொள்ளாச்சியில் 27 போ், கணபதி, வெள்ளக்கிணறில் தலா 18 போ், துடியலூா், காரமடையில் தலா 17 போ், இடையா்பாளையத்தில் 15 போ், சிங்காநல்லூரில் 13 போ் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 642 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 388 ஆக உயா்ந்துள்ளது.

6 போ் பலி

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50, 55, 56 வயது ஆண்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76, 90 வயது முதியவா்கள், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 402 ஆக உயா்ந்துள்ளது.

613 போ் வீடு திரும்பினா்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 613 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 23 ஆயிரத்து 331 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 655 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com