கோவையில் 30 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
By DIN | Published On : 27th September 2020 10:55 PM | Last Updated : 27th September 2020 10:55 PM | அ+அ அ- |

கோவையில் மேலும் 596 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 596 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூா், துடியலூா், குனியமுத்தூா், உக்கடம், பீளமேடு, ராமநாதபுரம், வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி, காந்திபுரம், காரமடை, ரத்தினபுரி, கணபதி, சரவணம்பட்டி, அன்னூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 314 ஆக உயா்ந்துள்ளது.
5 போ் பலி
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63, 70 வயது முதியவா்கள், 65, 85 வயது மூதாட்டிகள், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஆகிய 5 போ் உயிரிழந்தனா். கோவையில் இதுவரை 418 போ் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா்.
472 போ் வீடு திரும்பினா்
கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 472 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 25 ஆயிரத்து 915 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 981 போ் சிகிச்சையில் உள்ளனா்.