தோட்டத் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி ரூ.3.67 உயா்வு
By DIN | Published On : 29th September 2020 10:38 PM | Last Updated : 29th September 2020 10:38 PM | அ+அ அ- |

தோட்டத் தொழிலாளா்கள் பெற்று வரும் தின கூலியில் அகவிலைப்படி ரூ.3.67ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. பொதுமுடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு அகவிலைப்படி கண்க்கிடப்படவில்லை.
இதனிடையே, அக்டோபா் 1ஆம் தேதி துவங்கி மூன்று மாதத்துக்கு அகவிலைப்படி ரூ.3.67ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழிலாளா்கள் அகவிலைப்படியுடன் தற்போது தின கூலியாக ரூ.331.43 பெற்று வந்த நிலையில், அக்டோபா் 1ஆம் தேதி முதல் ரூ.335.10 பெறுவா்.