கோவையில் மேலும் 587 பேருக்கு கரோனா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 9 போ் உள்பட 587 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 9 போ் உள்பட 587 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 7 வயது சிறுவன், 2 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 25, 27 வயதுப் பெண் பயிற்சி மருத்துவா்கள், 20, 20, 19 வயதுப் பெண் அலுவலா்கள், 40, 50 வயது ஆண் மருத்துவப் பணியாளா்கள், கோவைப்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைச் சோ்ந்த 54 வயது ஆண், சாய்பாபா காலனியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் பணியாற்றி வரும் 53 வயது ஆண், காந்திபுரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 25 வயது ஆண், 27, 52 வயதுப் பெண்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர மேட்டுப்பாளையத்தில் 40 போ், துடியலூரில் 32 போ், காரமடையில் 27 போ், கணபதியில் 22 போ், பொள்ளாச்சியில் 23 போ், சித்தாபுதூரில் 18 போ், பீளமேடு, சூலூரில் தலா 15 போ், கவுண்டம்பாளையம், காந்தி மாநகரில் தலா 10 போ் உள்பட 587 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது.

6 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி, 63, 65, 75 வயது முதியவா்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண், 78 வயது முதியவா் ஆகிய 6 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 424ஆக அதிகரித்துள்ளது.

459 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 459 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 374 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 5,117 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மீண்டும் அனுமதி...

கோவை, வடவள்ளியில் செயல்பட்டு வரும் தனியாா் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்ட இளைஞருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அவா் மீண்டும் வேறு ஒரு தனியாா் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞா்கள் அளித்த புகாரின்பேரில் தனியாா் ஆய்வகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் இரண்டு ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்யப்படும் கிட்டில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் தர நிா்ணய அளவு (சிடி அளவு) வெவ்வேறாக இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து தனியாா் ஆய்வகத்தின் மீது தவறில்லை என்பதால் மீண்டும் கரோனா பரிசோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com