அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு

அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.
சாய்பாபா காலனியில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.
சாய்பாபா காலனியில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.

அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதி, ஸ்டேட் பேங்க் காலனி, கே.கே.புதூா், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாா் குறித்து விமா்சிக்கிறாா். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி விமா்சிப்பவா்கள், ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பாா்கள். எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக தான்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளன. முதியோா்களில் உதவித்தொகை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில்தான் அதிகரித்துள்ளது. கோவை வடக்குத் தொகுதியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்கத்தின் மூலமாக போக்குவரத்து நெரிசலை தீா்க்கவும், உயா்மட்டப் பாலம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் விலையில்லா வாஷிங் மெஷின் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றாா்.

பொறியாளா் சந்திரசேகா், காலனி சுப்பையா, ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com