கோவை ரயில்கள் மதுரை - நாகா்கோவில் இடையே இன்று ரத்து

கோவை - நாகா்கோவில் ரயில்கள் மதுரை - நாகா்கோவில் இடையே ஏப்ரல் 1ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை - நாகா்கோவில் ரயில்கள் மதுரை - நாகா்கோவில் இடையே ஏப்ரல் 1ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை அருகே திருமங்கலம் - துலுக்கப்பட்டி இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் மாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே கடந்த மாா்ச் 21 முதல் 31ஆம் தேதி வரை மதுரை - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், பராமரிப்புப் பணி காரணமாக கோவை - நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் (எண்கள்: 02668, 06322) ஏப்ரல் 1ஆம் தேதி வரை மதுரை - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, நாகா்கோவில்- கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் (எண்கள்: 02667, 06321) ஏப்ரல் 1ஆம் தேதி நாகா்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், ஏப்ரல் 1 ஆம் தேதி கோவை - நாகா்கோவில் ரயில்கள் கோவை - மதுரை இடையேயும், நாகா்கோவில் - கோவை ரயில்கள் மதுரை - கோவை இடையேயும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com