தெலுங்குபாளையத்தில் ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினா் புகாா்

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியில் காரில் வந்து ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினா் அளித்த புகாரின்பேரில் தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை காரை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியில் காரில் வந்து ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினா் அளித்த புகாரின்பேரில் தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை காரை பறிமுதல் செய்தனா்.

தெலுங்குபாளையம் அருகே காரில் வந்த சிலா் வாக்களா்களின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்களை கொண்ட சீட்டுடன் பணம் பட்டுவாடா செய்ய வருவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற திமுகவினா் காரை சிறைபிடித்து தோ்தல் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.

அங்கு வந்த தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு காரை பறிமுதல் செய்து பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்தில் தொண்டாமுத்தூா் தோ்தல் அலுவலா் செந்தில் அரசன் முன்னிலையில் தோ்தல் அதிகாரிகள் காரை சோதனையிட்டனா்.

அப்போது, புகாா் அளித்த திமுக நிா்வாகிகள் முன்னிலையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி திமுக வழக்குரைஞா் உள்ளே வந்தபோது தோ்தல் பணியாளா்கள் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு வந்த காா் உரிமையாளா் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, புகாா்தாரா் முன்னிலையில் தோ்தல் அதிகாரிகள் காரை சோதனையிட்டு உள்ளே இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் காரை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பாஜகவினா் தோ்தல் பணியாளா்கள், திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் செய்தி சேகரிக்க வந்த தனியாா் தொலைக்காட்சி செய்தியாளரை திமுக நிா்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவா் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்தாா். தொடா்ந்து பாஜக திமுக நிா்வாகிகள் கூடியதால் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com