மாவட்டத்தில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையொட்டி நாளொன்றுக்கு கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையொட்டி நாளொன்றுக்கு கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, மாநகராட்சியில் மீண்டும் நடமாடும் பரிசோதனை மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த முறையைவிட தற்போது கரோனா பரவல் வேகமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த மாா்ச் 19ஆம் தேதி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்த நிலையில் அடுத்த 10 நாள்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. அடுத்த 5 நாள்களுக்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.

கரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பை விரைந்து கண்டறியும் விதமாக கோவையில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை, தற்போது 4 ஆயிரம் முதல் 4,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் பொது மக்களிடையே கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் விதமாக மீண்டும் நடமாடும் பரிசோதனை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் 5 வாகனங்கள் மூலம் பொது இடங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. குடும்ப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமே நோய்த் தொற்று அதிகமாக பரவுகிறது.

எனவே பொது மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். சமூக இடைவெளியைப் பின்பற்றல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முசடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com