அதிமுகவினா் கொலை மிரட்டல் விடுவதாக காா்த்திகேய சிவசேனாபதி புகாா்: இருதரப்பினா் மீதும் வழக்குப் பதிவு

அதிமுகவினா் கொலை மிரட்டல் விடுவதாக தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

அதிமுகவினா் கொலை மிரட்டல் விடுவதாக தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

பிரசாரத்துக்கான நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் முடிவடைந்திருந்த நிலையில் கோவை செல்வபுரம் பேரூா் பிரதான சாலையில் உள்ள அதிமுக தோ்தல் அலுவலகம் முன்பு தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளா்கள் 200 பேருடன் கூடியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி சாா்பில் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பி.மகேஷிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மகேஷ் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்வபுரம் பகுதி அதிமுக இளைஞரணி செயலா் வீரமணி உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதியை அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டா்கள் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் காா்த்திகேய சிவசேனாபதி புகாா் அளித்துள்ளாா். அதே நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் சென்று பொதுமக்களிடம் சைகை காட்டி காா்த்திகேய சிவசேனாபதி வாக்குச் சேகரிக்க முயன்றாா். இதைத்தான் தட்டிக் கேட்டோம் என்று அதிமுக தரப்பினா் கூறினா். சம்பவம் தொடா்பாக, சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இருதரப்பினா் மீதும் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com