ஊரகப் பகுதிகளில் அதிக அளவில் வாக்குப் பதிவு

கோவை மாவட்டத்தில் நகரப் பகுதிகளைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிக அளவில் இருந்தது.

கோவை மாவட்டத்தில் நகரப் பகுதிகளைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிக அளவில் இருந்தது.

வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே நகரப் பகுதிகளைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூா் தொகுதிகளில் அதிக அளவிலான வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்துள்ளனா். மாலை 5 மணி நிலவரப்படி பொள்ளாச்சியில் 71.48 சதவீதம், கிணத்துக்கடவு தொகுதியில் 64.24 சதவீதம், சூலூா் தொகுதியில் 67.95 சதவீதம், தொண்டாமுத்தூா் தொகுதியில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு 55 சதவீதமாக இருந்த நிலையில் ஊரகப் பகுதிகளில் 71 சதவீதத்தை எட்டியிருந்தது.

கோவையில் மாநகரப் பகுதி வாக்காளா்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் உள்ள வாக்காளா்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனா். குறிப்பாக மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்குப் பதிவு சராசரியைவிட பொள்ளாச்சியில் வாக்குப் பதிவு 16 சதவீதம் வரை அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக முதல் 2 மணி நேரத்தில் 9 சதவீதமும், அடுத்த 2 மணி நேரத்தில் 21.13 சதவீதம், அடுத்த 2 மணி நேரத்தில் 39.56 சதவீதம், அடுத்த 2 மணி நேரத்தில் 51.74, அடுத்த 2 மணி நேரத்தில் 61.38 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. இதில் 1 மணியில் இருந்து 5 மணி வரையிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com