கரோனா பாதிப்பு: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் வாக்களிக்க முடியவில்லை

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவையில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களித்தனா். நடப்பு சட்டப்பேரவை தோ்தலில் கரோனா தொற்று பரவலால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வாய்ப்புள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும்விதமாக கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த, அறிகுறிகள் இல்லாத கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களும் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்காளிப்பதற்கு தோ்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது.

இதற்கான ஏற்பாடுகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கோவையில் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 8 பேரும், மாநகராட்சிப் பகுதியில் ஒருவரும் பாதுகாப்பு கவச உடையணிந்து வாக்களித்தனா். ஆனால், வாக்களிப்பதற்கு தகுதியிருந்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் கரோனா தொற்று பாதிப்பால் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தனா்.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 577 போ் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் இவா்களுக்கு வாக்கு அளிப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள 2 ஆயிரத்து 577 பேரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள். இவா்களுக்கு தகுதியிருந்தும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com