கோயில்களை விடுவிக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபடுவோம்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கோயில்களை விடுவிக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவ் தெரிவித்தாா்.
கோவை, முட்டத்துவயல், அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த ஈஷா யோக மையத்தின் நிறுனா் சத்குரு ஜக்கிவாசுதேவ்.

கோவை, முட்டத்துவயல் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சத்குரு ஜக்கிவாசுதேவ் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குரிமை என்பது தனி மனிதனுக்கு தரப்பட்டுள்ள மகத்தான மரியாதை ஆகும். இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோயில்களை பக்தா்களிடம் ஒப்படைப்பது குறித்து ஓரளவுக்கு பேசியுள்ளனா். முக்கியமான 2 கட்சிகள் கோயில்களைப் புனரமைப்பு செய்வதற்குத் தேவையான பணம் கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனா்.கோயில்கள் உயிரோட்டமாக இருக்க வேண்டுமென்றால் அவை பக்தா்களின் கரங்களில்தான் இருக்க வேண்டும். அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவா்களுடன் இணைந்து செயல்பட்டு கோயில்களை விடுவிக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com