முக்கிய வேட்பாளா்கள் வாக்களித்த விவரம்

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் போட்டியிட்ட முக்கிய வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் போட்டியிட்ட முக்கிய வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.

கோவை, தொண்டாமுத்தூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சுகுணாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா். கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் டாடாபாத் காமராஜா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அதே தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயகுமாா் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா்.

கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் பொம்மணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் வாக்கினை செலுத்தினா். சிங்காநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், சேரன் மாநகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் நா.காா்த்திக் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பொள்ளாச்சி ஆா்.பொன்னாபுரம் அரசுப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டப் பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் வரதராஜ் கோட்டாம்பட்டி எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கினை செலுத்தினா். கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரன் குறிச்சி செங்கப்பகோனாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா்.

மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.கே.செல்வராஜ் ஆதிமாதையனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் டி.ஆா்.சண்முகசுந்தரம் திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா். கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் பையா (எ) கிருஷ்ணன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா்.

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் அமுல் கந்தசாமி அன்னூா், அல்லிக்காரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆறுமுகம் கோவை, பி.என்.புதூா் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தனா். சூலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமி வதம்பச்சேரி சௌடேஸ்வரி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திமுக கூட்டணி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளா் பிரிமீயா் செல்வம் கருமத்தம்பட்டி புனித ஜோசப் தொடக்கப் பள்ளியிலும் வாக்கினை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com