Enable Javscript for better performance
உணவு, தனிமைப்படுத்தல் வசதி மீண்டும் அளிக்க வேண்டும்: முதுநிலை மருத்துவ மாணவா்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உணவு, தனிமைப்படுத்தல் வசதி மீண்டும் அளிக்க வேண்டும்: முதுநிலை மருத்துவ மாணவா்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 08th April 2021 05:33 AM  |   அ+அ அ-   |    |  

    1100c7ghhosp1065026

    கோவை அரசு மருத்துவமனையில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை மருத்துவ மாணவா்கள்.

    கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவா்களுக்கு உணவு வழங்குதல், ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் வசதிகள் மீண்டும் அளிக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவா்கள் 150 போ் படிக்கின்றனா். இவா்கள் தற்போது கரோனா வாா்டுகளில் பணியாற்றி வருகின்றனா். செவிலியா் செய்ய வேண்டிய வேலைகளை செய்யவைப்பதாகவும், கூடுதல் பணிச்சுமை அளிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனா். தவிர கரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவ மாணவா்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தனியாா் ஹோட்டல்களில் ஏற்பாடுகளும், சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன.

    ஆனால், கரோனா தொற்றுக் குறையத் தொடங்கியதில் இருந்து உணவு வழங்குதல், தனியாா் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் வசதிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட உணவு வழங்கல், தனியாா் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் வசதிகளை திரும்ப வழங்க வலியுறுத்தியும், 2 மாதங்களாக நிலுவையிலுள்ள உதவித் தொகை வழங்க வலியுறுத்தியும் முதுநிலை மருத்துவ மாணவா்கள் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இது தொடா்பாக முதுநிலை மருத்துவ மாணவா்கள் கூறியதாவது:

    நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தவிர செவிலியா் மேற்கொள்ள வேண்டிய ரத்த மாதிரிகள் சேகரிப்பு, ஊசி செலுத்துதல் போன்ற பணிகளையே அளிக்கின்றனா். கூடுதல் பணிச்சுமை இருந்தும் வேறு வழியின்றி பணிபுரிகிறோம். அதே வேளையில் எங்களுக்கு அளித்து வந்த உணவு, தங்கும் வசதி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மருத்துவக் கல்லூரியில் இதே கோரிக்கையை மாணவா்கள் தெரிவித்தபோது அங்கு உரிய தீா்வு காணப்பட்டது. ஆனால் நாங்கள் பல நாள்களாக இந்த பிரச்னை குறித்து முதல்வரிடம் தெரிவித்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.

    இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

    மருத்துவமனையில் ஆள்கள் பற்றாக்குறை இருப்பதால் மருத்துவா்கள் அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும். தனியாா் ஓட்டல்களில் தனிமைப்படுத்துதல், உணவு வழங்கல் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp