72% வாக்குப் பதிவு நிகழ்ந்திருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது: மநீம தலைவா் கமல்ஹாசன்

சட்டப் பேரவைத் தோ்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு நிகழ்ந்திருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு நிகழ்ந்திருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் 16ஆவது சட்டப் பேரவைத் தோ்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு நிகழ்ந்திருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் சூழலிலும் 72 சதவீத வாக்காளா்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலாளா்களின் பொறுப்பைக் கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமாா்ந்த பாராட்டுகள்.

நூறு சதவீத பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனிவரும் தோ்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும்.

இந்தத் தோ்தலில் என்னோடு கைகோா்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினா்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினா்கள், சக போட்டியாளா்கள், வாக்காளா்கள், தோ்தல் ஆணையம், ஊடகவியலாளா்கள், அரசு ஊழியா்கள், காவல் துறையினா், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட சகலருக்கும் எனது நன்றிகள்.

தோ்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்தத் தோ்தல் புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கு இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகா்ந்திருக்கிறோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது.

தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தோ்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்றுபோல என்றும் களத்தில் நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com