கொடிசியா சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம்

கொடிசியா அமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு தெரிவித்துள்ளாா்.

கொடிசியா அமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுக்க தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலா் என்.முருகானந்தத்துடன் நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் கொடிசியா பங்கேற்றது. தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3,500 ஆக அதிகரித்துள்ளது. எனவே வணிக நிறுவனங்கள் தங்களின் தொழிலாளா்களின் உடல் நலனையும், பொதுமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் கொண்டு வர முடிவு செய்யப்படவில்லை என்றாலும் கடுமையான விதிகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசுடன் சோ்த்து மக்களுக்கும் உள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாகவே முன்வந்து 15 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தொழிற்சாலைகள் தங்களின் ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்த விவரங்களை சுகாதாரத் துறை கேட்கும்போது வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இதற்காக ஒரு அலுவலரை நியமித்து பணியாளா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

மருத்துவ மையத்தை தங்களின் வளாகத்திலேயே அமைத்திருக்கும் தொழிற்சாலைகள் அதை தடுப்பூசி மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

100 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகள் தங்களின் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பினால் அவா்கள் கொடிசியாவை அணுகலாம். கொடிசியா அதற்கான ஏற்பாடுகளை செய்யும். இதற்கான விழிப்புணா்வு முகாம்களை ஏற்பாடு செய்யவும் கொடிசியா திட்டமிட்டிருப்பதாக ரமேஷ் பாபு மேலும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com