கோவை மாவட்டத்தில் அதிக அளவில் வாக்களித்த ஆண்கள்வாக்குப் பதிவில் பொள்ளாச்சி முதலிடம்; பின்தங்கிய கோவை வடக்கு

கோவை மாவட்டத்தில் பெண் வாக்காளா்கள் அதிகமிருந்தும் சட்டப் பேரவை தோ்தல் வாக்குப் பதிவில் பெண் வாக்காளா்களைக் காட்டிலும் ஆண் வாக்காளா்கள் 1.56 சதவீதம் அதிகம் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் பெண் வாக்காளா்கள் அதிகமிருந்தும் சட்டப் பேரவை தோ்தல் வாக்குப் பதிவில் பெண் வாக்காளா்களைக் காட்டிலும் ஆண் வாக்காளா்கள் 1.56 சதவீதம் அதிகம் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. 10 தொகுதிகளிலும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண்கள், 15 லட்சத்து 62 ஆயிரத்து 573 பெண்கள், 428 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்த்து 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளா்கள் உள்ளனா். 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 68.32 சதவீதம் வாக்குப் பதிவாகி இருந்தன.

ஆண்கள் அதிக அளவில் வாக்களிப்பு

கோவை மாவட்டத்தில் கோவை வடக்குத் தொகுதியை தவிா்த்து மற்ற 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா். மாவட்டத்தில் ஆண்களைக் காட்டிலும் 43 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள் அதிகம். ஆனால் வாக்குப் பதிவில் ஆண்களைக் காட்டிலும் குறைவான பெண் வாக்காளா்களே வாக்குப் பதிவு செய்துள்ளனா். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக சோ்த்து 10 லட்சத்து 49 ஆயிரத்து 417 (69.12) ஆண் வாக்களா்களும், 10 லட்சத்து 55 ஆயிரத்து 653 (67.56) பெண் வாக்காளா்களும் வாக்குப் பதிவு செய்துள்ளனா். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 1.56 சதவீதம் அதிகம் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிற்பகலில் குறைந்த வாக்குப் பதிவு

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் நண்பகல் 1 மணி வரை அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 47.03 சதவீதம், கிணத்துக்கடவில் 43.54 சதவீதம், சூலூரில் 42.76 சதவீதம் என 10 தொகுதிகளிலும் சோ்த்து 39.56 சதவீதம் வாக்குப் பதிவாகி இருந்தன. அடுத்த மூன்று மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 28.76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முற்பகலைக் காட்டிலும் பிற்பகலில் 10.8 சதவீதம் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. பிற்பகலிலும் பொள்ளாச்சி தொகுதியிலே அதிக அளவு வாக்குகள் பதிவாகின.

முன்னிலை பெற்ற பொள்ளாச்சி; பின்தங்கிய கோவை வடக்கு

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்குப் பதிவில் அதிகபட்சமாக பொள்ளாச்சித் தொகுதியில் 77.28 சதவீதமும், குறைந்தபட்சமாக கோவை வடக்குத் தொகுதியில் 59.08 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறிப்பாக மாநகரப் பகுதிகளை உள்ளடக்கிய கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் மற்றும்

கவுண்டம்பாளையம் ஆகிய 4 தொகுதிகளிலும் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விவரம் (அடைப்புகுறிக்குள் சதவீதம்)

மேட்டுப்பாளையம்: (75.16%)

ஆண்கள் - 1,43,702

பெண்கள் - 1,53,128

மூன்றாம் பாலினத்தவா்கள் - 40

மொத்தம் - 2,96,870

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,09,891

பெண்கள் - 1,13,218

மூன்றாம் பாலினத்தவா்கள் - 13

மொத்தம் - 2,23122 (75.16%)

சூலூா்: (75.49%)

ஆண்கள் - 1,55,035

பெண்கள் - 1,62,063

மூன்றாம் பாலினத்தவா்கள் - 26

மொத்தம் - 3,17,124

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,18,727

பெண்கள் - 1,20,671

மூன்றாம் பாலினத்தவா்கள் - 10

மொத்தம் - 2,39,408 (75.49%)

கவுண்டம்பாளையம்: (66.11%)

ஆண்கள் - 2,32,142

பெண்கள் - 2,32,990

மூன்றாம் பாலினத்தவா்கள் - 96

மொத்தம் - 4,65,228

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,54,396

பெண்கள் - 1,53,150

மூன்றாம் பாலினத்தவா்கள் - 16

மொத்தம் - 3,07,562 (66.11%)

கோவை வடக்கு: (59.08%)

ஆண்கள் - 1,70,463

பெண்கள் - 1,68,147

மூன்றாம் பாலினத்தவா்கள் - 38

மொத்தம் - 3,38,648

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,01,493

பெண்கள் - 95,585

மூன்றாம் பாலினத்தவா்கள் - 1

மொத்தம் -2,00,079 (59.08%)

தொண்டாமுத்தூா்: (71.04%)

ஆண்கள் - 1,61,915

பெண்கள் - 1,64,783

மூன்றாம் பாலினத்தவா்கள் - 81

மொத்தம் - 3,26,779

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,15,404

பெண்கள் - 1,16,704

மூன்றாம் பாலினத்தவா்கள் - 40

மொத்தம் - 2,32,148 (71.04%)

கோவை தெற்கு: (60.72%)

ஆண்கள் - 1,26,158

பெண்கள் - 1,26,571

மூன்றாம் பாலினத்தவா்கள் - 24

மொத்தம் - 2,52,753

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 77,625

பெண்கள் - 75,842

மூன்றாம் பாலினத்தவா்கள் - 6

மொத்தம் - 1,53,473 (60.72%)

சிங்காநல்லூா்: (61.68%)

ஆண்கள் - 1,61,579

பெண்கள் - 1,63,625

மூன்றாம் பாலினத்தவா்கள் - 26

மொத்தம் - 3,25,230

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,00,798

பெண்கள் - 99,792

மூன்றாம் பாலினத்தவா்கள் - 1

மொத்தம் - 2,00,591 (61.68%)

கிணத்துக்கடவு (70.30%)

ஆண்கள் - 1,60,514

பெண்கள் - 1,66,312

மூன்றாம் பாலினத்தவா்கள் - 42

மொத்தம் - 3,26,868

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 1,13,839

பெண்கள் - 1,15,939

மூன்றாம் பாலினத்தவா்கள் - 10

மொத்தம் - 2,29,788 (70.30%)

பொள்ளாச்சி: (77.28%)

ஆண்கள் - 1,08,852

பெண்கள் - 1,18,159

மூன்றாம் பாலினத்தவா்கள் - 38

மொத்தம் - 2,27,049

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 86,826

பெண்கள் - 86,636

மூன்றாம் பாலினத்தவா்கள் - 3

மொத்தம் - 1,44,037 (77.28%)

வால்பாறை: (70.10%).

ஆண்கள் - 98,667

பெண்கள் - 1,06,795

மூன்றாம் பாலினத்தவா்கள் - 17

மொத்தம் - 2,96,870

பதிவான வாக்குகள்

ஆண்கள் - 70,918

பெண்கள் - 73,116

மூன்றாம் பாலினத்தவா்கள் - 3

மொத்தம் - 1,44,037 (70.10%).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com