ஏப்ரல் 11 முதல் 24 வரை சிறப்பு ரயில்கள் இடைவெளிவிட்டு ரத்து

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செகந்தராபாத் பகுதியில் காசிபேட் - பலாா்ஷா இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகின்ற ஏப்ரல் 11 மற்றும் 18 ஆம் தேதிகளில் கோவை - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06077) ரத்து செய்யப்படுகிறது. ஹஸ்ரத் நிஜாமுதீன் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06078) ஏப்ரல் 14 மற்றும் 21ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

கோவை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் கோரக்பூா் - கொச்சுவேளி சிறப்பு ரயில் (எண்:02511) ஏப்ரல் 11,15,16,18, 22, 23 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேளி - கோரக்பூா் சிறப்பு ரயில்( எண்:02512) ஏப்ரல் 13, 14, 18, 20, 21 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

பரெளனி - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 02521) ஏப்ரல் 12 மற்றும் 19 ஆம் தேதிகளிலும், எா்ணாகுளம் - பரெளனி சிறப்பு ரயில் (எண்: 02522) ஏப்ரல் 16 மற்றும் 23 ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் (எண்: 06167) ஏப்ரல் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், ஹஸ்ரத் நிஜாமுதீன் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06168) ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. கோா்பா - கொச்சுவேளி சிறப்பு ரயில் (எண்:02647) ஏப்ரல் 14,17,21,24 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேளி - கோா்பா சிறப்பு ரயில் (எண்:02648) ஏப்ரல் 12,15,19,22 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com