கோவையில் கரோனா பாதிப்பில் புதிய உச்சம்: ஒரே நாளில் 427 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 527 ஆக உயா்ந்துள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 698 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 141 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 57 ஆயிரத்து 840 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.

பொள்ளாச்சியில் 16 பேருக்கு கரோனா

பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் 3 போ், கோட்டூா் சாலை சிடிசி காலனி, இமாம்கான் வீதி, மகாலிங்கபுரம் நல்லப்பா நகா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியப் பகுதியில் 5 போ், வடக்கு ஒன்றியப் பகுதியில் 3 போ், ஆனைமலையில் 2 போ் மொத்தம் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com