மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா: தொற்று கண்டறியப்பட்ட 75 பகுதிகள் தனிமைப்படுத்தல்

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று பாதிப்பு மாா்ச் 2 ஆவது வாரத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300க்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் 300க்கும் குறைவானவா்களே கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயா்ந்துள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து நாள்தோறும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்வதற்கும், வரும் வாரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500ஆக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மாநகராட்சியில் மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று கண்டறியப்பட்ட வீதி முழுவதும் அடைக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று கண்டறியப்படும் வீடு, அதனைச் சுற்றியுள்ள 2 வீடுகள் மட்டுமே அடைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் தற்போது 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தொற்று பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலே மீண்டும் கரோனா கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை நிலவரப்படி கோவை மாநகராட்சியில் 41 பகுதிகள், ஊரகத்தில் 34 பகுதிகள் என மொத்தம் 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com