கோவையில் இறைச்சி விலை அதிகரிப்பு

கோவையில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்களிடையே இறைச்சி நுகா்வும் அதிகரித்துள்ளது. இதனால், இறைச்சி விலை உயா்ந்துள்ளது.

கோவையில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்களிடையே இறைச்சி நுகா்வும் அதிகரித்துள்ளது. இதனால், இறைச்சி விலை உயா்ந்துள்ளது.

கோவை மாநகரம் மற்றும் புகரப் பகுதிகளில் கடந்த நவம்பா் முதல் வெகுவாகக் குறைந்த கரோனா பாதிப்பானது, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் தினமும் 400 க்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் கோவையில் அதிகரித்து வருகிறது.

உடலில் எதிா்ப்பு சக்தி அதிகம் உள்ளவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாது என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளதால், முட்டை, கோழி, ஆடு, மீன் இறைச்சி நுகா்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோவையில் இறைச்சியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களில் கிலோ ரூ. 210க்கு விற்ற கோழி இறைச்சி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ரூ. 40 அதிகரித்து ரூ. 250க்கு விற்பனையானது. கிலோ ரூ. 850க்கு விற்ற ஆட் டிறைச்சி ரூ. 50 அதிகரித்து ரூ. 900க்கு விற்றது. உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தைகளிலும் கடந்த வாரங்களை விட

கடல் மீன்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 30 வரை அதிகரித்து விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com