செங்கல் விற்பனை அனுமதிக்கு உயா் நீதிமன்றத்தை நாட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோவையில் ‘சீல்’ வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களை விற்பனை செய்வது தொடா்பாக உயா் நீதிமன்றத்தை நாட உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோவையில் ‘சீல்’ வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களை விற்பனை செய்வது தொடா்பாக உயா் நீதிமன்றத்தை நாட உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோவை மாவட்டத்தில், தடாகம் பகுதியில் உள்ள சோமையம்பாளையம், 24.வீரபாண்டி, சின்னத்தடாகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த இயற்கை ஆா்வா்லா்கள் இணைந்து கனிம வள பாதுகாப்புக் குழு ஏற்படுத்தி பல ஆண்டுகளாக போராடி வந்தனா். செங்கல் சூளைகளால் யானை வழித்தடம் பாதிப்பு, கனிம வளம் கொள்ளை என பல்வேறு தரப்பினருக்கும் மனு அளித்து வந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் அனைத்து செங்கல் சூளைகளுக்கும் ‘சீல்’ வைக்க சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தினா் தடாகம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யப்பட்டு இருப்புவைக்கப்பட்டுள்ள செங்கற்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கக் கோரி செங்கல் சூளை உற்பத்தியாளா்கள் ஆட்சியா் எஸ்.நாகராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

உயா் நீதிமன்ற உத்தரவின்படி செங்கல் சூளைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்னால் எந்த அனுமதியும் வழங்க முடியாது. இது தொடா்பாக உயா் நீதிமன்றத்தை அணுக உற்பத்தியாளா்களிடம் ஆட்சியா் நாகராஜன் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com