தினமும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டம்

கோவையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
கோவையில் கரோனா தடுப்பூசி வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
கோவையில் கரோனா தடுப்பூசி வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.

கோவையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். நோய்த் தொற்று பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட தகுதியான நபா்கள் உள்ள தனியாா் நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது.

இநிலையில், தடுப்பூசிப் பணியை மேலும் துரிதப்படுத்தும்விதமாக மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மண்டலத்துக்கு 3 வாகனங்கள் வீதம் 5 மண்டலத்துக்கு 15 வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவைா மாநகராட்சி வளாகத்தில் தடுப்பூசி வாகனங்களை வாகனங்களை திங்கள்கிழமை தொடங்கிவைத்த மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:

தடுப்பூசி வாகனங்கள் முலம் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதன் மூலம் மாநகராட்சியில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அறிகுறி இல்லாமல கரோனாவால் பாதிக்கப்படுவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சிப் பகுதியில் 1,500 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் 1,500 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தனியாா் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீத பணியாளா்கள் மட்டுமே பணிப்புரிய வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளா்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது.

பொது இடங்களில் தேவையின்றி மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முகக் கவசம் அணியாதவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com