மின் உற்பத்தி நிலைய ஊழியா்களுக்கு தடுப்பூசி
By DIN | Published On : 12th April 2021 11:16 PM | Last Updated : 12th April 2021 11:16 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்துநிற்கும் மின் உற்பத்தி நிலைய ஊழியா்கள்.
வால்பாறை அருகே உள்ள நவமலை மற்றும் காடம்பாறை மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் நூற்றுக்கணக்கானோா் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் திங்கள்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் மின் நிலையங்களின் கண்காணிப்புப் பொறியாளா் ரபீக் உள்பட நவமலை மற்றும் காடம்பாறை மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.