வாக்கு எண்ணிக்கைக்கு 438 அலுவலா்கள் தோ்வு: கோவை வடக்கில் 35 சுற்றுகள் செல்ல வாய்ப்பு

கோவையில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவதற்கு 438 அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவதற்கு 438 அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கைக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேசைகள், மற்ற 9 தொகுதிகளுக்கு 14 மேசைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு மேசைக்கு ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் என 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 438 போ் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்வு செய்யப்பட்டுள்ள பணியாளா்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடா்பான பயிற்சி அந்தந்தத் தொகுதிகளில் விரைவில் அளிக்கப்படவுள்ளது.

அதிகபட்சமாக கோவை வடக்குத் தொகுதியில் 35 சுற்றுகள், குறைந்தபட்சம் வால்பாறை தொகுதியில் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர சூலூா், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூா், சிங்காநல்லூா், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் 30 சுற்றுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com