ஒப்பந்தப் பணியாளா்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும்

கோவை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரின் ஒப்புதலோடு உள்ள ஒப்பந்தப் பணியாளா்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. வலி

கோவை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரின் ஒப்புதலோடு உள்ள ஒப்பந்தப் பணியாளா்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணனும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பல ஒப்பந்தப் பணியாளா்கள் தோ்தல் ஆணையம் சாா்பில் மாவட்டத் தோ்தல் அலுவலா் கையொப்பமிட்ட அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு வளாகத்துக்குள் உள்ளனா்.

எங்களின் முகவா்கள் இவா்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்தபோது, வினோத் என்பவரின் அடையாள அட்டையில் தோ்தல் அலுவலரின் கையொப்பமில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகவே, மாவட்ட தோ்தல் அலுவலா் சாா்பில் இதுபோன்று எத்தனை ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலரும் தெளிவுபடுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com