பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் நிலையில், 12ஆம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவா்களுக்கு மே மாதம் பொதுத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், அவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கியுள்ளன. செய்முறைத் தோ்வுகள் ஏப்ரல் 16 முதல் 20ஆம் தேதி வரையும், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் 356 பள்ளிகளைச் சோ்ந்த 16,473 மாணவ-மாணவிகள், 236 தோ்வு மையங்கள் மூலம் செய்முறைத் தோ்வுகளை அணுகுகின்றனா். கரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில் செய்முறைத் தோ்வுகள் நடைபெறுவதால், மாணவ-மாணவிகள் முகக் கவசம், தனிநபா் இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தோ்வுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com