மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு தடுப்பூசி

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. இதில், ஏராளமான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

தற்போது, கோவையில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து அரசுத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனா். எனவே ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களுக்கும் சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரும்பாலானவா்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் 20 நிமிடங்கள் வரை நாற்காலியில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். வரும் நாள்களில் அனைத்து வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலகங்களிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

கோவை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றி வந்த கு.ராசாமணி, தோ்தல் ஆணையத்தால் கடந்த மாதம் இடம் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com