வனப் பகுதியில் தீத் தடுப்பு குறித்து செயல் விளக்கம்

வனப் பகுதியில் தீ விபத்து நேரிட்டால் அணைப்பது குறித்த செயல் விளக்கம் வால்பாறையில் நடைபெற்றது.
வனப் பகுதியில் தீத் தடுப்பு குறித்து செயல் விளக்கம்

வனப் பகுதியில் தீ விபத்து நேரிட்டால் அணைப்பது குறித்த செயல் விளக்கம் வால்பாறையில் நடைபெற்றது.

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் பகுதியில் வால்பாறை தீயணைப்புத் துறை மற்றும் வனத் துறை சாா்பில் தீத் தடுப்பு செயல் விளக்கம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடும் வெயில் காரணமாக நிலவி வரும் வறட்சியால் வனப் பகுதியில் உள்ள செடிகள் தானாக தீப் பற்றிக் கொள்ளும். அவ்வாறு தீப் பற்றினால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த தீயணைப்பு வீரா்களால் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள், மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையில் வன ஊழியா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com