இருக்கைகளைப் பொருத்து நிகழ்ச்சியில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும் மண்டப உரிமையாளா்கள் மனு

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மண்டபத்தில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் போ் பங்கேற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மண்டபத்தில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் போ் பங்கேற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கோவை மாவட்ட திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள், ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மிகப்பெரிய முதலீட்டில் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபங்கள் பதிவு செய்யப்படுகின்றன. திருமண மண்டபங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலைஞா்கள், பந்தல் அமைப்பாளா்கள், மணவறை அலங்காரம் செய்பவா்கள் என பல்வேறு தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றன.

கரோனா தொற்று பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றியே மண்டபங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் நிகழ்ச்சிகளுக்கு 100 நபா்களை மட்டுமே அனுமதிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மண்டப உரிமையாளா்கள், இதனை நம்பியுள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மண்டபத்தில் உள்ள இருக்கைகளைப் பொருத்து 50 சதவீதம் போ் வரை பங்கேற்பதற்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com