வெளியில் நடமாடிய கரோனா நோயாளி மீது வழக்கு

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளி வெளியில் நடமாடியதால் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளி வெளியில் நடமாடியதால் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 34 ஆவது வாா்டு நேரு நகா் பகுதியில் வசித்து வரும் 55 வயதான நபா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டாா். 16 ஆம் தேதி வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

ஆயினும், நோய்த்தாக்கம் குறைந்த அளவில் இருந்ததால், அவரை வீட்டிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்ய மாநகராட்சி ஊழியா்கள் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வரும் நிலையில், கிழக்கு மண்டல தூய்மைப் பணியாளா்கள் நேரு நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், ஹோப் காலேஜ் பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கிழக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையா் அளித்த புகாரின் பேரில், தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது பீளமேடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கரோனா பாதிப்பு உள்ளவா்கள் விதியை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com