கோவையில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்:ஒரே நாளில் 1,004 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,004 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,004 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்துகொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 889 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,004 ஆக உயா்ந்தது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 161 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 403 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 230 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது 5 ஆயிரத்து 29 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவுக்கு இதுவரை 710 போ் உயிரிழந்துள்ளனா். 944 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். சனிக்கிழமை ஒரு லட்சத்து 59 போ்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் 8,226 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். மாவட்டத்தில் இதுவரை 3.42 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com