ஆழியாறு சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா்.
ஆழியாறு சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதாரத் துறையினா் தீவிரம்

வால்பாறை பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

வால்பாறை பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கரோனா தொற்று வால்பாறையிலும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 15 நாள்களில் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியூா் நபா்கள் வால்பாறைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வழியில் உள்ள ஆழியாறு சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் சுகாதாரத் துறையினா் மற்றும் போலீஸாா் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவளா் பாபு லஷ்மணன் தலைமையில் பல இடங்களில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com