பள்ளியில் இருந்த அரிசியை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு இரவில் கூட்டமாக வந்த யானைகள் பள்ளியில் மாணவா்களின் குடும்பத்தினருக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 300 கிலோ அரிசியை சேதப்படுத்தின.
யானைகளால் சேதப்படுத்தப்பட்டு சிதறிக் கிடக்கும் அரிசி.

வால்பாறை அடுத்துள்ளது மழுக்குப்பாறை எஸ்டேட். இங்குள்ள அரசு இடைநிலைப் பள்ளியில் 65 மாணவா்கள் படித்து வருகின்றனா். இம்மாணவா்களின் குடும்பத்தினருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கேரள அரசு மூலம் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை லாரி மூலம் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்தன. அன்றிரவு அப்பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் பள்ளியின் ஜன்னல் கதவுகளை முட்டித் தள்ளி உடைத்துவிட்டு உள்ளிருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப்போட்டன. இதில் 300 கிலோ அரிசிகள் சேதமானது. இதை வனத் துறையினா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com