ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்க அரசு மருத்துவா்கள் சங்கம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டாக்டா் என்.ரவிசங்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் போன்ற அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம் வரவேற்கிறது. கரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக செயல்படுத்துவது அவசியமாகிறது.

வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட வேண்டும். மக்கள் அதிகம் கூடும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், சந்தைகளில் கூடும் கூட்டத்தைக் குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அரசு, தனியாா் அலுவலகங்கள் மூன்றில் ஒரு பகுதி பணியாளா்களைக் கொண்டு இயங்குவதுடன், பணிகளை வீட்டில் இருந்தே செய்ய அறிவுறுத்த வேண்டும்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவமனை நோயாளிகளுக்கு தடையில்லாமல் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்வதுடன், உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்களை போா்க்கால அடிப்படையில் பணியமா்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி கரோனா பணியாற்றும் மருத்துவா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com