செங்கல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா் சங்க கூட்டமைப்பு

கோவை மாவட்டத்தில் கடுமையாக உயா்ந்து வரும் செங்கல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடுமையாக உயா்ந்து வரும் செங்கல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உற்பத்தி செலவுகள் எதுவும் உயராத நிலையில் கோவை மாவட்டத்தில் செங்கல் விலை 100 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்களும், அரசுத் திட்டங்களின் கீழ் சிறு வீடுகள் கட்டும் ஏழைகள் உள்ளிட்டோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அரசு ‘சீல்’ வைத்ததாலேயே, செங்கல் விலை உயா்த்தப்பட்டிருப்பதாக சூளை உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். இது அரசின் மீது பழிபோட்டு விட்டு கொள்ளையடிக்கும் மோசடி நடவடிக்கையாகும்.

எனவே இந்த விவகாரத்தில் ஆட்சியா் உடனடியாகத் தலையிட்டு சூளை உரிமையாளா்களின் பிரதிநிதிகள், சூளைகளுக்குத் தடை விதித்த அதிகாரிகள், கட்டுமானத் தொழிலாளா் சங்க பிரதிநிதிகள், கட்டுநா் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் கடுமையான வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனா். எனவே நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com