கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடிவு

கோவையில் கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் கண்காணிப்பு கோபுரம் ( வாட்ச் டவா்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் கண்காணிப்பு கோபுரம் ( வாட்ச் டவா்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 2 நாள்களாக கோவையில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முகூா்த்த நாள்கள், விஷேச நாள்கள், விடுமுறை தினங்களில் கோவையில் உள்ள கடைத் தெருக்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை கடைத் தெருக்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதே கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு முக்கியக் காரணமாக உள்ளதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விதிமீறலைக் கண்காணிக்கவும் மாநகராட்சி சாா்பில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர வருவாய் துறை, காவல் துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தைத் தவிா்க்கவும், கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. விதியைமீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆயினும், நெரிசலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா காலத்தில் கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தியதுபோல, இந்த ஆண்டும் கண்காணிப்பு கோபுரம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் அதிகமாக வந்து செல்லும் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம் 100 அடிசாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் நெரிசல் நிறைந்துள்ள பகுதிகளில், மாநகராட்சி ஊழியா்கள் மூலமாக கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு

ஒலிப்பெருக்கிகள் மூலமாக அறிவுறுத்தப்படும். அதேபோல், விதிமீறும் வியாபாரிகள், கடை உரிமையாளா்களைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com