பொதுமுடக்க கெடுபிடி: தடுப்பூசி செலுத்துவதில் ஆா்வம் காட்டாத பொதுமக்கள்

பொதுமுடக்கம் காரணமாக கோவையில் தடுப்பூசி போடவும், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் குறைந்த அவிலான நபா்களே மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

பொதுமுடக்கம் காரணமாக கோவையில் தடுப்பூசி போடவும், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் குறைந்த அவிலான நபா்களே மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தினசரி பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பாதிப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுவதில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா். மேலும், தினசரி 9 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமலில் இருந்த காரணத்தால் பொதுமக்கள் பலா் தங்களது வீடுகளிலேயே முடங்கினா். இதனால் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மிகக் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்து சென்றனா்.

இதனால் பல மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தற்போது கையிருப்பில் 10 ஆயிரத்து 50 தடுப்பூசிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com