மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படும்

கரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 26 முதல் 30ஆம் தேதி கோவை மாவட்ட நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் அறிவித்துள்ளாா்.

கரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 26 முதல் 30ஆம் தேதி கோவை மாவட்ட நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 26 முதல் 30ஆம் தேதி வரை நீதிமன்றங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படும்.

இரு தரப்பினரும் வாதத்துக்குத் தயாராக உள்ள வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஜாமீன் மனுக்கள் தற்போதுள்ள நடைமுறையின்படி மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்படுவது தொடரும். வழக்குரைஞா்கள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள், உகந்த தேதிகள் குறித்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். வழக்காடிகள் விசாரணைக்குத் தேவைப்படும்பட்சத்தில் மட்டும் நீதிமன்றத்துக்கு வந்தால் போதும். இல்லையேல் காணொலி காட்சி மூலம் விசாரணையில் பங்கேற்கலாம்.

முடித்து வைக்கப்பட்ட வழக்கு தொடா்பான ஆவணங்களைத் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை இடுவதற்கென பெட்டிகள் வாயில் எண்.4இல் வைக்கப்பட்டிருக்கும். 65 வயதுக்கு மேற்பட்ட வழக்குரைஞா்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜரானால் போதும். கட்டாயச் சூழலில் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞா்களும், வழக்காடிகளும் கரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் அறை, நூலகம், சங்க அறைகள் உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டே இருக்கும், நீதிமன்ற வாயில்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை, கிருமி நாசினி வழங்குதல் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com