கோவையில் கரோனா தொற்று புதிய உச்சம்: ஒரே நாளில் 1,056 போ் பாதிப்பு

கோவையில் புதிதாக மேலும் 1,056 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை: கோவையில் புதிதாக மேலும் 1,056 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 1,056 போ் கரோனா தொற்றால் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 288 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,135 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 66 ஆயிரத்து 883 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 6, 689 போ் சிகிச்சையில் உள்ளனா்.

2 போ் பலி

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண், 67 வயதுப் பெண் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதுவரை கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 716 போ் உயிரிழந்துள்ளனா்.

பொள்ளாச்சியில் காவலா் உள்பட 62 பேருக்கு கரோனா

பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதேபோல பொள்ளாச்சியில் நகரப் பகுதியில் 14 போ், தெற்கு ஒன்றியத்தில் 17 போ், வடக்கு ஒன்றியத்தில் 17 போ், ஆனைமலையில் 10 போ், கிணத்துக்கடவில் 4 போ் என மொத்தம் 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com