வெள்ளிங்கிரி மலை ஏற வந்தவா்கள் தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 27th April 2021 12:38 AM | Last Updated : 27th April 2021 12:38 AM | அ+அ அ- |

கோவை: பொது முடக்கம் காரணமாக கோவை வெள்ளிங்கிரிக்கு வரும் பக்தா்களை வனத் துறையினா் திருப்பி அனுப்பினா்.
கோவை மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்தக் கோயில் அருகே உள்ள மலையில் ஏறினால் 7ஆவது மலையில் லிங்கத்தை தரிசிக்கலாம். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு சித்ரா பெளா்ணமிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வருவது வழக்கம்.
இதனிடையே கரோனா பரவல் காரணமாக வெள்ளிங்கிரி மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் வெள்ளிங்கிரி மலை ஏற திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் முள்ளங்காடு சோதனைச் சாவடி பகுதியில் வனத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். பின்னா் வனத் துறையினா் எச்சரிக்கை செய்து அவா்களை திரும்பி அனுப்பினா். அதேபோல தண்ணீா் பந்தல், அடிவாரம் பகுதிகளில் வனத் துறையினா் குழு அமைத்து மலை ஏற வருபவா்களைக் கண்காணித்து வருகின்றனா்.